IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிடும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டார் ?இளம்பெண்ணின் வைரல் கடிதம்

Get real time updates directly on you device, subscribe now.


இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ராகுலை ஒப்பிடும் அளவிற்கு அப்படி என்ன செய்து விட்டார் என்று பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


“அன்புடன் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு…”


பெங்களூரை சேர்ந்த திருமதி. ‘விஜய லட்சுமி பிரசாத்’ என்ற பெண்ணின் கடிதம்.
“கோடிக்கணக்கானவர்கள் நரேந்திர மோடியை தங்கள் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள்…


உங்களை எத்தனை பேர் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள்?


‘பரம்பரை அரசியல் வேண்டாம்’ என்பவர்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.


ஆனால், நீங்களோ… ‘வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட’ அதே பரம்பரையை சேர்ந்தவர்.


காந்தி என்ற குடும்ப பெயரை தவிர நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதித்தது என்ன?


உங்கள் குடும்பத்தாரால் பெரும்பாலோர் மிக அதிக காலம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்.


ஒவ்வோர் ஆண்டும்… மோடியின் பிறந்த நாளன்று அவரது தாயார், அவருக்கு பகவத் கீதை புத்தகம் பரிசளிக்கிறார். சரியான பாதையை தேர்ந்தெடு…’ என்று நினைவு படுத்த…


உங்கள் தாயார் உங்களுக்கு என்ன தருகிறார்?


நரேந்திர மோடி, பதவியேற்க பாராளுமன்றத்தை நெருங்கிய போது தரையில் விழுந்து வணங்கினார்.


‘ஜனநாயகத்தின் கோவில்’ என்று கூறி உள்ளே நுழைந்தார்.


நீங்களும் அப்படித்தான் பாராளுமன்றத்தை மதித்திருக்கிறீர்களா?


குஜராத் முதலமைச்சராக அவர் ராஜினாமா செய்த போது… அதுவரை வாங்கிய தன்னுடைய சம்பளம் ரூபாய் 21 லட்சத்தை…அரசு வேலை செய்வோரின் குழந்தைகள் கல்விக்காக தானம் செய்திருந்தார்.


இந்த தேசத்துக்காக இதுவரை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் ராகுல்?


மோடியின் தலைமையில், இந்த நான்காண்டுகளில் 478 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்.


உங்கள் அரசு தலைமையில் இருந்தபோது எத்தனை பயங்கரவாதிகள் இறந்தார்கள்?


சுதந்திரம் பெற்ற நாள் முதல், 30% மேலாக ஏழைகள் சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டார்.


இந்த நான்காண்டுகளில் 5 கோடி பேருக்கு கிடைத்துள்ளது.
காஷ்மீரில் இனி ஆடலாம், பாடலாம் – பிரதமர் மோடி அனுமதி


இதை உங்கள் அரசு ஏன் செய்யவில்லை?


மோடி அவர்கள்… குடும்ப அரசியல், பரிந்துரைகள், சிபாரிசுகள் எதையும் செய்வதில்லை.


உங்கள் குடும்பமோ இந்த நாட்டையே தங்கள் சொத்தாக பாவிக்கிறது.


உங்கள் ஆட்சி நடந்த போது, ராபர்ட் வத்ராவுக்கு ஏன் இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டன?


சைனா, டோக்லாம் பகுதியில் வாலாட்டியது ஆனால் இறுதியில் சைனாவை பின் வாங்க செய்தார் மோடி இது உலக சரித்திரமாக மாறியது


இது உங்களால் செய்ய முடியுமா? அந்த தகுதி, தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?


மோடி தைரியமாக பாகிஸ்தான், பர்மா, பூடான் உள்ளே சென்று தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்தார்.


நம் எல்லைகளை பாதுகாக்க இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்? பாகிஸ்தானுக்குள் புகுந்து துவம்சம் செய்தார் மோடி ,,


இந்த மாதிரி கணவாவது உங்களுக்கு வருமா ?


இந்த நான்காண்டுகளில் ஒரு லஞ்ச ஊழல் புகார் கூட அவர் மீதோ, அவர் கட்சியின் மீதோ இல்லை.


கடந்த 60 ஆண்டுகளில் ஊழல் செய்யாத ஆண்டு என்று ஒன்றை காட்ட முடியுமா உங்களால்?


உங்கள் கட்சியினர் அவரை ‘டீ விற்றவர்’ என்று கிண்டல் செய்கிறார்கள். அவரும் ஒப்புக்கொள்கிறார். எங்களுக்கு அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.
அதுவும் நேர்மையான பிழைப்புதானே?


நீங்கள் பிழைப்புக்காக எதையெல்லாம் விற்றீர்கள் என்று சொல்ல முடியுமா?
என்னென்ன தொழில்களை நேர்மையாக செய்தீர்கள்…’ என்று கூற முடியுமா?


நரேந்திர மோடி நம் நாட்டு நலனுக்காக பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார்.


நீங்கள் வெளிநாடு செல்வது யார் நலனுக்கு?’ என்று கூற முடியுமா?


பிரதமர் மோடி, ஒரு ரேங்க், ஒரு பென்சன் முறையை மீண்டும் ஏற்படுத்தினார். இந்தியாவிலே தயாரிக்க பட்ட குண்டு துளைக்காத கவசங்கள் தலைக்கவசம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பெற்று தந்தார்.


இது எதையுமே உங்கள் காங்கிரஸ் செய்யவில்லையே. ஏன்?


‘வீடில்லாதவர்களுக்கு வீடு’ என்ற திட்டத்தில் இதுவரை 30 கோடி பேர் பதிந்துள்ளார்கள்.


இது ஏன் உங்கள் ஆட்சியில் சாத்தியப்படவில்லை?


பெண் குழந்தைகளை காக்க “பெண்களை காப்போம், பெண்களை படிக்கவைப்போம்” திட்டத்தை துவக்கினார். நீங்கள் பெண்களை காப்பாற்ற இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?


மோடி ‘முத்ரா இன்சூரன்ஸ் திட்டத்தை’ கொண்டுவந்து பல கோடி பேருக்கு இன்று பயன் தர வைத்தார்.


இத்தனை ஆண்டுகளில் எத்தனை பேருக்கு உங்கள் திட்டங்கள் போய் சேர்ந்துள்ளன?
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது ஒரு குற்றமா !


அவரது சேவையை பாராட்டி அமேரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பூடான், ஸ்ரீலங்கா, ஆப்கனிஸ்தான், நேபாள், ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்தன.


இது போல எத்தனை அரசுகள் தங்களை அழைத்து பேச சொல்லி கூறின?


நான்காண்டுகளில் ‘மோடி உலகின் சக்தி வாய்ந்த பத்து பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது’ டைம்ஸ் நிறுவனம்.


உங்கள் ஆட்சியில் நமது பிரதமரை மனுசனா கூட உலக நாடுகள் மதிக்க வில்லையே ஏன் ?


22000 பேர் முன்னால்… மோடி, மேடிசன் சதுக்கத்தில், “நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்களோ, பாம்பாட்டிகளோ அல்ல. நாடு முழுக்க ஆட்சியாளர்கள் தான்…” என்று கூறினார்.


நம் நாட்டை பற்றி அப்படி சொல்ல உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா ராகுல்?


மோடி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறார். விமானத்திலேயே தூங்கி நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்துகிறார்.


நீங்கள் நாட்டுக்காக எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள் ராகுல்?


மோடிக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. கடும் உழைப்பால், அர்ப்பணிப்பால், தியாகத்தால் ஒரு பிரதமராக உயர்ந்துள்ளார். உங்களால் உங்கள் காந்தி அடையாளத்தை துறந்து, உங்கள் திறமை கொண்டு எதையாவது செய்து சாதிக்கும் பக்குவம் இருக்கிறதா?


18 வயதில், மோடி தன் வீட்டை துறந்து, RSSஇல் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய முனைந்தார். நீங்கள் உங்கள் 18 வது வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ராகுல்?


இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ‘மோடி போல ஆகவேண்டும்’ என்று கனவு காண்கிறான். எத்தனை பேர் உங்களை போல ஆக வேண்டும் என்று எண்ணுவார்கள்?


இந்த நாட்டை நடத்த வெறும் ‘காந்தி என்ற பெயர்’ அடையாளம் போதாது. துணிவும், நேர்மையும், அர்ப்பணிப்பும் வேண்டும்…


அது உங்களிடம் இருக்கிறதா?


இனிமேலாவது, மோடியுடன் தங்களை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்.


நன்றி…!
#NarendraModi #RagulGandhi #Bangalore #ViralLetter #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader