IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விடா முயற்சியால் வெற்றி : ரபேஃல் போர் விமானத்தை இயக்கும் இந்திய விமானப்படை வீராங்கனை சிவாங்கி சிங்

Get real time updates directly on you device, subscribe now.

சமீபத்தில் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்ட ஐந்து ரபேஃல் போர் விமானங்கள் படையணியில் விமானப்படை வீராங்கனை சிவாங்கி சிங் இடம்பெற்றிருக்கிறார்.

இதன் மூலம், இந்திய அரசு துறைகளில் ஆணும் பெண்ணும் சமம் என்ற வாக்கியத்துக்கு வலு சேர்த்திருக்கிறார் சிவாங்கி.

இந்திய விமானப்படையின் அங்கமான ரபேஃல் படையணியில் சேர்ந்துள்ள ஃபளைட் லெப்டிணன்ட் சிவாங்கி அந்த விமானத்தை இயக்கப்போவது கூடுதல் சிறப்பு.

சிவாங்கி வரலாறு – சுவாரஸ்ய தகவல்கள்

உத்தர பிரதேசத்தின் வாராணசியைச் சேர்ந்தவர் சிவாங்கி சிங். இந்திய விமானப்படையில் 2017ஆம் ஆண்டில் சேர்ந்த இவரிடம், பயிற்சி முடித்ததும் MIG-21 பைசன் ரக போர் விமானத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

தனது மகள் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது டெல்லியில் உள்ள விமானப்படை அருங்காட்சியகத்துக்கு தனது தாத்தாவுடன் சென்றதுதான் சிவாங்கியின் முதலாவது விமானப்படை கள அனுபவம் என்று அவரது தாய் சீமா நினைவுகூர்கிறார்.

அப்போது விமானப்படை அதிகாரிகள் சீருடையில் பணியாற்றி வருவதை பார்த்து ஈர்க்கப்பட்ட சிவாங்கி, தானும் அவர்களைப் போலவே விமானப்படையில் விமானியாக வேண்டும் என தீர்மானித்ததும் அந்த அருங்காட்சியகத்தில்தான் என்கிறார் சீமா.

கல்லூரி படிப்பில் பூத்த ஆர்வம்

பி.எஸ்சி படிக்கும்போது கல்லூரியின் தேசிய சாரணர் படையின் விமானப்படைப்பிரிவில் சேர்ந்தார் சிவாங்கி. இரண்டாம் ஆண்டு படித்தபோது விமானப்படையில் சேருவதற்கான தேர்வை எழுதினார். கடினமான உழைப்பு, ஈடுபாடு காரணமாக அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார்.

ஆனால், படையில் சேர்வானபோது விமானி அல்லாத பிரிவில் பணியைத் தேர்வு செய்யும்படி அவரது தாத்தா கூறியிருக்கிறார்.

ஆனால், எனது கனவே ஒரு விமானப்படை விமானி ஆவதுதான். அது இல்லாமல் போனால் விமானப்படை வேலையே வேண்டாம் என்று சிவாங்கி உறுதிபடக் கூறியதாக சீமா தெரிவித்தார்.

பதக்கங்கள் குவித்தவர் சிவாங்கி

தனது இளம் வயதில் இருந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சிவாங்கி, மிகவும் துணிச்சலுடன் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் விளங்கியதாக அவரத் தாய் குறிப்பிட்டார்.

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற அவர் அந்த விளையாட்டில் சாம்பியனாகவும் இருந்திருக்கிறார். இரு முறை தடகள போட்டியில் வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களையும் அவர் பெற்றதாக சீமா கூறினார்.

ராணுவ குடும்ப பின்னணியை கொண்ட சிவாங்கியின் தாய் சீமா

சீமா சிங்கும் ராணுவ குடும்ப பின்னணியைக் கொண்டவர். இரவது அப்பா ராணுவத்தில் கர்னல் ஆக பணியாற்றியவர். ஆனால், தனது அப்பாவை போல மகள் சிவாங்கி பாதுகாப்பு படையில் சேருவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்கிறார் சீமா.

இளம் வயதில் இருந்தே சிவாங்கி மிகவும் துறுதுறுப்பும் விடாப்பிடியான குணமும் கொண்டவராக இருந்திருக்கிறார்.

கல்வியில் தீவிர கவனம் செலுத்திப் படிக்க அந்த குணங்களே அவருக்கு உதவியிருக்கின்றன என்று அவரது தாய் சீமா கூறுகிறார்.

இத்தகைய சூழலில் ரஃபால் போர் விமானத்தை இயக்க எனது மகள் தேர்வாகியிருக்கிறார் என்று வரும் செய்திகள், ஒரு தாயாக எனக்கு எத்தகைய உணர்வைத் தரும் என நினைத்துப் பாருங்கள்.

இதை நினைத்துப் பெருமைப்படுவதா, அச்சப்படுவதா என எனக்குத் தெரியவில்லை என்கிறார் சீமா. இருந்தபோதும், ஒரு விமானியாக பணியில் சேரும்போதே, ஆபத்தான சூழல்களையும் அவர்கள் எதிர்கொண்டாக வேண்டியது கள யதார்த்தம்.

அதனால், மகளின் உச்சத்தை நினைத்து பெருமைப்படும் அதே சமயம், அதனால் ஏற்படும் அச்சமும் என்னுள் குடிகொண்டிருக்கிறது என்கிறார் சீமா.

தற்போது ரஃபால் போர் விமானத்தின் தொழில்நுட்ப அம்சங்களுடன் பரீட்சியமாகும் வகையில் அதற்கான ஒத்திகை பயிற்சியில் சிவாங்கி சிங் ஈடுபட்டு வருகிறார்.

அந்த பயிற்சி முடிவடைந்ததும் முறைப்படி அவர் வசம் அந்த விமானத்தை இயக்கும் முழு பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய ராணுவத்தில் பெண்கள் பங்கு

இந்திய அரசின் சமீபத்திய தகவலின்படி இந்திய பாதுகாப்புப் படைகளில் ராணுவத்தில் 6892 பேர் பெண் அதிகாரிகள். விமானப்படையில் 1878 பேர் பெண்கள். கடற்படையில் 685 பேர் மட்டுமே உள்ளனர்.

சமீபத்தில் அரசு எடுத்த முடிவின்படி இந்திய விமானப்படையின் எந்தவொரு பிரிவிலும் பெண்கள் பணியாற்ற தடை கிடையாது. அரசின் கொள்கை முடிவின்படி விமானப்படை பணியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நடைமுறை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், அரசு வேலைவாய்ப்பு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது.

2015இல்தான் முதல் முறையாக இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பிரிவில் பெண்கள் ஈடுபடுவதற்கான அனுமதியை அரசு வழங்கியது.

அப்போது குறுகிய கால பணிகள் அடிப்படையில் பெண்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் போர் விமான நிரந்தர பணியில் இணைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

தற்போது சிவாங்கி சிங் இயக்கும் ரஃபால் விமானம், அணு ஏவுகணையை தாங்கியவாறு எதிரி இலக்கை சுட்டு வீழத்தும் வகையில், உலகின் மிக நவீனமயமான தொழில்நுட்ப ஆற்றல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரான்ஸில் இருந்து தற்போது 10 ரஃபால் போர் விமானங்கள் இந்தியாவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader