ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கம்

Get real time updates directly on you device, subscribe now.

தென் மாவட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு அரங்கமாக மதுரையில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கம் உள்ளது. 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த மைதானம் கடந்த 1970 ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த 2004, 2012 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசு நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தனி நபர் போட்டிகள், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, இறகுப் பந்து போன்ற குழுப்போட்டிகள் அனைத்து வகை போட்டிகளும் இங்கு நடைபெற்று வருகிறது.

சுமார் 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இந்த மைதானத்தில் அமர்ந்து விளையாட்டுப் போட்டிகளை காணும் அளவிற்கு மூன்று கேலரிகள் உ்ளளன. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை இங்கு தினமும் விளையாடுவதற்கும், வாக்கிங் பயிற்சிக்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் வந்து செல்கிறார்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More