IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது – முதல்வர் பழனிச்சாமி

Get real time updates directly on you device, subscribe now.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர்.

அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்களுடன் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இதுபோன்று தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொடூரமான சம்பவம் குறித்து முதல்வர் பழனிச்சாமி டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader