புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்!

Get real time updates directly on you device, subscribe now.

புதுச்சேரி சட்டசபையில் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் வாசித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கல் கோஷம் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து, சபையின் மாண்பை குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் செயல்படக்கூடாது, என்றார். சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் கோஷம் எழுப்பப் பட்டது. இதையடுத்து பொறுமையிழந்த சபாநாயகர் உறுப்பினர்கள் சபையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டால் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தார்.


ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோ‌ஷம் போட்டபடி சபைக்குள் தர்ணா செய்தனர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் சுகுமாரன், கோபிகா சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டதால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader