IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோருக்கு ரூ.5000 சன்மானம்! அசத்தும் புதுச்சேரி அரசு!!

4

விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோருக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட் நிலையில், இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பை வகித்து வரும் முதல்வர் நாராயணசாமி 2019-2020 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.


விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட மானியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5500 ஆக இருந்தது. இந்த தொகை இனி ரூ.6500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் நாராயண சாமி அறிவித்தார். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு வருவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


மேலும் பட்ஜெட்டின் ஹைலைட்டாக சாலை விபத்தில் சிக்குவோருக்கு உடனடி சிகிச்சையை, உரிய நேரத்தி வழங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில், விபத்தில் சிக்கியயவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும், என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.