IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கடற்கரையில் விளையாடிய 2 குழந்தைகள் கடலில் மூழ்கி பலி

Get real time updates directly on you device, subscribe now.

புதுச்சேரியில் கடற்கரையில் விளையாடியபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரு குழந்தைகள் கடலில் மூழ்கி பலியானார்கள்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபன் (35). இவர் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மளிகை கடையில் வேலை செய்து வருபவர் தீபன் (35). இவருக்கு கவிதா என்ற மனைவியும், நித்திஷ்; (7) என்ற மகனும், தன்ஷிகா (5) என்ற மகளும் இருந்தனர். நித்திஷ் 3ம் வகுப்பும், தன்ஷிகா யுகேஜியும் படித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளியில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் வம்பாகீரப் பாளையத்தில் உள்ள கவிதாவின் தாயாரின் வீட்டிற்கு குழந்தைகள் இருவரும் சென்றனர்.

பின்னர் அங்குள்ள கலங்கரை விளக்கம் அருகே பாண்டி மெரினா கடற்கரையில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்களாம். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி நித்திஷ் தன்ஷிகா ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் கடலில் மூழ்கினர்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் இறங்கி அவர்களை மீட்டனர். குழந்தைகள் இருவரும் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த போது கடலில் மூழ்கி ஒரே வீட்டில் இரு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader