IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஜாமீனில் வந்த அதிமுக பிரமுகர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை

113

 

புதுக்கோட்டை அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த அதிமுக பிரமுகர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தந்தை-மகனை வெட்டிக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது ஜாமினில் வந்திருந்த அவர் இன்று காலை திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் மூர்த்தியிடம் தகராறு செய்ததுடன், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

Related Posts
1 of 16

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கொலை செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க மூர்த்தி கொலை செய்யயப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

#pudhukottai #jamin #ADMK #murder