பொதுமக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக CCTV கேமரா பொருத்தும் விழா

Get real time updates directly on you device, subscribe now.

சட்டத்திற்கு புறம்பான வழிப்பறி, செயின் பறிப்பு மற்றும் சில குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது காவல்துறையினருக்கு பெரிதும் உதவுவது CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தான்.

அந்த வகையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு மிகவும் பயனுள்ள வகையில் மதுரை மாநகரின் மையப்பகுதியான தெற்குவாசல் மற்றும் 67 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான இராமச்சந்திராபுரம், தெற்கு வெளி வீதி, தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் CCTV கேமரா பொருத்தப்பட்டு அதன் துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நன்மைக்காக பொதுமக்கள் நலச்சங்கம் தொடங்கப்பட்டு அதன் பெயர்ப்பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதனை வெகுவாக பாரட்டி வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் இதே போன்ற செயல்களை முன்னெடுப்பது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்ல பலனைத் தரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More