IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மொழித் திறன் பயிற்சி அமர்வுகளை நடத்தியது பிடிஇ அகாடெமிக்

158


ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ள விரைவான, நேர்மையான மற்றும் நெகிழ்வான வழியை ஆர்வலர்களுக்கு அளிக்கும் கணினி அடிப்படையிலான மொழித் தேர்வான பிடிஇ அகாடெமிக் கோவையில் பயிற்சி அமர்வை நடத்தியது. பேராசிரியர்கள், பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள், வேலை வாய்ப்பு பெற உதவும் இயக்குனர்கள், பன்னாட்டு அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர்கள் ஆகியோருக்காக நடத்தப்பட்ட இந்த அமர்வு மூலம் தங்கள் மாணவர்களின் மொழித் திறனை அதிகரிப்பதுடன், வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்னும் கனவையும் நனவாக்க முடியும்.


பிடிஇ அகாடெமிக் தொடர்பான இடைப்பரிமாற்ற அமர்வு, பொருள் அறிமுகம், மெப்ரொ (ஆன்லைன் ஆங்கில மொழிப் பகுப்பாய்வுக் கருவி) ஆகியவற்றுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 34 நிலையங்களைச் சேர்ந்த 50க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வந்திருந்தோர் அமர்வுக்கு மகத்தான வரவேற்பளித்ததுடன், பிடிஇ அகாடெமிக் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளவும் ஆர்வம் காட்டினர்.


இது குறித்து பியர்சன் இந்தியா விற்பனை & சந்தையியல் பிரிவு தலைவர் இராமாநந்தா கூறுகையில் வெளிநாட்டில் வேலை பார்க்கவோ, படிக்கவோ திறன் தேர்வுகளை எழுத விரும்பும் ஆர்வலர்களுக்கு ஆங்கில மொழித் திறன் அவசியமாகும். வேகமான, நேர்மையான, துல்லியமான முறையில் 2-5 நாள்களில் தேர்வு முடிவுகளை அறிவிப்பதால் கோவையிலுள்ள ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் எங்கள் பிடிஇ அகாடெமிக்கை வாழ்த்தி மகத்தான வரவேற்பளித்துள்ளனர். அத்தியாவசியமான மொழித் திறனை மேலும் வளர்த்து நிபுணத்துவம் பெற இதுபோன்ற பல நுண்ணோக்கு அமர்வுகளைத் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களைக் குதூகலிக்க உறுதி பூண்டுள்ளோம்’ என்றார்.


பிடிஇ அகாடெமிக் கணினி அடிப்படையிலான மொழித் தேர்வான பிடிஇ அகாடெமிக் பன்னாட்டு மாணவர்கள் மற்றும் வேலை தேடுவோர் வேகமான (5 வணிக நாள்களில் முடிவுகள்), நேர்மையான (துல்லியமான கணினி வழி மதிப்பெண்கள் என்பதால் தேர்வாளர் விருப்பப்படி வழங்க இயலாது) மற்றும் நெகிழ்வான (தேர்வு அமர்வுகள் ஆண்டுக்கு 363 நாள்களும்) முறையில் தங்கள் ஆங்கில மொழித் திறனை நிரூபிக்கலாம்.


ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து மற்றும் நியூசீலாந்து நாடுகளிலுள்ள 100% பல்கலைக்கழகங்கள் இத்தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் நாடுகளின் பிரபல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி அளிப்போர், தொழில்முறைச் சங்கங்கள் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல், யேல் பல்கலைக்கழகம், இன்சீட், லண்டன் பிசினஸ் ஸ்கூல் ஆகியவையும் பிடிஇ அகாடெமிக் தேர்வுகளை ஒப்புக் கொண்டுள்ளன.

#PTE #Academic