IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விபசார கும்பலிடம் சிக்கித் தவித்த போலீஸ்காரர் அதிரடியாக மீட்பு! பொறி வைத்து பிடித்த தனிப்படை!!

13

விபசார கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர் ஒருவரை தனிப்படை போலீசார் அதிரடியாக மீட்ட சம்பவம் நடந்துள்ளது.


மதுரை ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர் ஒருவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அந்த எஸ்.எம்.எஸ். மெசேஜில், அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமா? எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான இடத்தில் உல்லாசமாக இருக்கலாம், என்பன போன்ற தகவல்கள் இருந்தன.

இப்படியும் ஒரு கொடூரம் மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொலையாளிகள்


விபசார கும்பல் தங்களுக்கு வாடிக்கையாளர்களை வரவழைப்பதற்காக இப்படி கவர்ச்சிகரமாக குறுந்தகவல் அனுப்பியது பற்றி, உடன் பணிபுரியும் போலீசாருக்கு தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து அந்த விபசார கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். பின்னர் வாடிக்கையாளர் போல, விபசார கும்பலிடம் போலீசார் போனில் பேசினர். அப்போது ஒரு மணி நேரத்திற்கு உல்லாசமா இருக்க ரூ.4 ஆயிரம் என்றும், ஒரு நாள் இரவு முழுவதும் இருப்பதற்கு ரூ.12 ஆயிரம் ஆகும் என்றும் எதிர்முனையில் பேசிய நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸ்காரர் எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார். மதுரையில் உள்ள பிரபலமான கல்லூரிக்கு அருகில் வந்து நிற்கும்படியும், அங்கிருந்து எங்களது ஆட்கள் வந்து அழைத்துச் செல்வார்கள் என்றும் போனில் பேசிய நபர் கூறினார். இதனைத் தொடர்ந்து விபசார கும்பல் குறித்து தனிப்படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் மாறுவேடத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி இருக்கும் பகுதிக்குச் சென்று கண்காணிக்கத் தொடங்கினர்.


போனில் பேசிய போலீஸ்காரரும் வாடிக்கையாளர் போலவே அந்த கல்லூரி பகுதிக்குச் சென்றார். அப்போது அங்கு சுப்பிரமணி என்பவர் பைக்கில் வந்துள்ளார். பின்னர் போலீஸ்காரரும் அந்த பைக்கில் ஏறி அவருடன் சென்றார். மறைந்து இருந்து கண்காணித்த தனிப்படை போலீஸ்காரர்களும் அந்த பைக்கை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் நேராக கூடல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றனர். தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு, அந்த வீட்டுக்குள் வாடிக்கையாளராகச் சென்ற போலீஸ்காரரை அழைத்து சென்றனர்.


வீட்டுக்குள் சென்றதும் அங்கே இருந்த இரண்டு இளம்பெண்களை போலீஸ்காரரிடம் காட்டியுள்ளனர். அவர்களில் ஒருவரை போலீஸ்காரர் தேர்ந்தெடுத்தார். பின்னர் அந்த பெண்ணுடன் படுக்கை அறைக்குள் சென்றுள்ளார். அறைக்குள் சென்று கதவைச் சாத்தியதும் கழிவறைக்குச் செல்வதாகக் கூறிய போலீஸ்காரர், ரகசியமாக தனிப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.


கூடல் நகர் பகுதியில் அந்த வீட்டுக்கு அருகில் காத்திருந்த தனிப்படை போலீசார் அதிரடியாக விபசார வீட்டுக்குள் புகுந்தனர். வாடிக்கையாளர் போல வந்தது மப்டி போலீஸ் என்பதை அறிந்த விபசார கும்பல் அங்கிருந்து தப்பிக்க முயன்றது. படுக்கை அறையில் அழகியுடன் இருந்த போலீஸ்காரரும் அங்கிருந்து வெளியே வர முயன்றார். ஆனால் அந்த விபசார பெண், போலீஸ்காரரை அறைக்குள் போட்டு, பூட்டிவிட்டு வெளியேறினார்.


வீட்டில் இருந்து வெளியேறிய விபசாரக் கும்பலை, வீட்டைச் சுற்றி வளைத்திருந்த போலீசார் அதிரடியாக 4 பேரை மட்டும் கைது செய்தனர். வடமதுரையை சேர்ந்த அய்யனார் (வயது 25), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சேகர் (வயது 23), ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 25) மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பியோடிய பெண்கள் மற்றும் பைக்கில் அழைத்து வந்த சுப்பிரமணி உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் கூடல் நகர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

#crime #prostitute #gang #police