IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோ வைரஸினால் ஸ்பெயின் இளவரசி மரணம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரனோ வைரஸ் பாதிப்பினால் உலகளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 844 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்றுவந்த 86 வயது இளவரசி மரியா தெரசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுவே ஸ்பெயின் அரச குடும்பத்தில் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More