IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அமெரிக்காவில் என்ன தான் நடக்கிறது..? டிரம்பிற்கு திறமை இல்லை – ஒபாமா குற்றச்சாட்டு

Get real time updates directly on you device, subscribe now.

உலகையை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. கொரோனா உயிர்பலி 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு திறமை இல்லை என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். பதிலுக்கு ஒபாமாவிற்கு தான் திறமை இல்லை என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸிற்கு அமெரிக்கா தான் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இதுவரை 15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டிரம்ப் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பேசும்போது, கொரோனா வைரஸ், அமெரிக்க தலைமையின் நிர்வாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இங்கு கொரோனா தவிர எதுவும் இல்லை. அதிகாரிகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கொரோனா வந்து காட்டிவிட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் , அதிபர் டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு டிரம்ப் கூறியதாவது: ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார். முற்றிலும் திறமையற்றவர். அவ்வளவு தான் சொல்வதற்கு வேறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader