IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இனி விசா இல்லாமல் பிரேசில் சென்று வரலாம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியா மற்றும் சீன நாட்டிலிருந்து பிரேசிலுக்கு செல்ல விரும்புவோருக்கு இனி விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ கூறியுள்ளார்.

இச்சட்டம் வருவதற்கு முன்னால் விசா இல்லாமல் பிரேசில் நாட்டிற்கு யாரும் பயணிக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் விசா புதுப்பித்த பிறகு தான் பயணிக்கும் முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இச்சட்டத்தின் மூலமாக விசாவை புதுப்பிக்க வேண்டியது அவசியம் இனி இருக்காது. என இரு நாட்டு மக்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்து தீவிர வலதுசாரி அரசியல்வாதியான போல்சனாரோ, சில வளர்ந்த நாடுகளிலிருந்து பிரேசிலுக்கு செல்ல விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற புதிய கொள்கையை உருவாக்கி, அதை நடைமுறைபடுத்தினார்.

இந்த வருடத்த தொடக்கத்தில், அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் பிரேசிலுக்கு செல்ல விசா புதுப்பிப்பதற்கான முடிவுக்கு கொண்டுவந்தது.

இதுகுறித்து பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ நேற்று (வியாழக்கிழமை) தென் அமெரிக்க நாடு, சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் அல்லது வணிகர்கள் தங்கள் நாட்டுக்கு வந்துச் செல்வதற்கான விசாவைப் பெறுவதற்கான தேவையைக் கைவிடுவதாகக் கூறினார்.

இனி இந்தியாவில் இருந்து பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா செல்லவோ அல்லது தொழில் தொடர்பாக வர்த்தகம் செய்யுவதற்காக செல்ல நேரிட்டால் விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தால் இந்தியா மற்றும் சீன மக்கள் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர்.

#President #JairBolsonaro #IndianCitizens #Visa #Brazil

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader