நடிகர் தவசி பூரண குணமடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக திரைப்படத் துறையில் சிறப்பாக பணியாற்றி மக்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் தற்போது மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவருக்கு திரைப்படத்துறையினர் பலர் உதவிகள் செய்து வருகிறார்கள். மேலும் அவர் பூரண குணமடைய வேண்டி பல்வேறு கிராமங்களில் உள்ள கோவில்களில் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் திரைப்பட நடிகர் புற்றுநோயால் அவதிப்படும் நிலையில் அவர் பூரண குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று மசூதி சர்ச் போன்ற இடங்களில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More