IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது

204

 

இமயமலையில் -45 டிகிரிக்கு கீழ் நடுங்கும் குளிரில் காலை பிரார்த்தனைக்காக வந்துள்ள சாதுவை அங்கிருந்த ராணுவ வீரர் ஒருவர் வீடியோ எடுத்துள்ள காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

இமையமலையில் எப்போதும் குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். இமயமலைக்கு செல்ல பிரத்யேக ஆடைகளை அணிய வேண்டும். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இமயமலையில் -45 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை இருந்தது.

இந்த கடும் குளிரில் சாது ஒருவர் இடுப்பில் சிறிய துண்டு மட்டும் அணிந்தபடி ஒரு நாயுடன் வரும் சாது விரிப்பு எதுவுமின்றி பனியில் நேரிடையாக அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோவை ராணுவ வீரர் ஒருவர் எடுத்துள்ளார். அது போல் இன்னொரு வீடியோவில் லேசான வெயில் இருக்கிறது. அதில் சாது பனிச்சரிவில் சறுக்கி ஆனந்தமாக விளையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த இரு வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Prayer #sathu #cold #minus #degree