IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டாரண்ட் கேஸ் நிறுவனத்தின் 42 சிஎன்ஜி மற்றும் 3 நகர எரிவாயு நிலையங்கள் சமூகத்திற்கு சேவையாற்ற அர்ப்பணிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

தர்மேந்திர பிரதான் டாரண்ட் கேஸ் நிறுவனத்தின் 42 சிஎன்ஜி நிலையங்கள் மற்றும் 3 நகர எரிவாயு நிலையங்களை சமூகத்திற்கு சேவையாற்ற அர்ப்பணித்தார்.

· 100 சிஎன்ஜி நிலையங்கள் எனும் மிகப்பெரிய மைல்கல்லை டாரண்ட் கேஸ் எட்டியுள்ளது

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் டெல்லியில் இருந்து காணொலி மூலமாக, டாரண்ட் கேஸ் நிறுவனத்தின் 42 சிஎன்ஜி நிலையங்களையும் (Compressed Natural Gas – CNG), 3 நகர எரிவாயு நிலையங்களையும் (City Gate Stations – CGS) சமூகத்திற்கு சேவையாற்ற அர்ப்பணித்தார். உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 8, குஜராத்தில் 6, பஞ்சாப்பில் 4, தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் 5 என்று இந்த சிஎன்ஜி நிலையங்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியவற்றில் தலா ஒரு நகர எரிவாயு நிலையம் உள்ளது.

இந்த 42 சிஎன்ஜி நிலையங்கள் நிறைவடைந்திருப்பதன் மூலமாக, மிகக்குறுகிய காலத்திற்குள் டாரண்ட் கேஸ் நிறுவனமானது 100 சிஎன்ஜி நிலையங்களை செயலாற்ற வைத்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. நகர எரிவாயு விநியோகத்தைப் (City Gas Distribution – CGD) பொறுத்தவரை, சக நிறுவனங்களைவிட மிக வேகமாக வளர்ந்து வருகிறது டாரண்ட் கேஸ். நிறுவனத்தினுள் நடக்கும் உற்பத்தி செயல்பாடுகளோடு, வேறு நிறுவனங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவது உள்ளிட்ட வெளிப்புறச் செயல்பாடுகளிலும் வளர்ச்சி கண்டுவரும் டாரண்ட் கேஸ் 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் உட்பட 32 மாவட்டங்களில் தனது நகர எரிவாயு விநியோக நெட்வொர்க்கை செயல்படுத்தும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. விரைவில், சென்னையில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி (Piped Natural Gas – PNG) கிடைக்கச் செய்ய முயற்சித்து வருகிறது டாரண்ட் கேஸ். இதுவரை சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி கிடைக்காத ஒரே மெட்ரோ நகரமாக சென்னை இருந்து வருகிறது.

Intellectual Property Protection | Trade Marks

நாட்டில் நகர எரிவாயு விநியோக உள்கட்டமைப்பை உருவாக்கி சிஎன்ஜி நிலையங்களை டாரண்ட் கேஸ் நிறுவனம் வேகமாக அமைத்துவருவதைப் பாராட்டிப் பேசினார் திரு.தர்மேந்திர பிரதான். “டாரண்ட் கேஸின் இந்த சாதனை மிகவும் பாராட்டத்தக்கது. காரணம் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்குள்ளாகவே 100 சிஎன்ஜி நிலையங்கள் என்ற ஒரு பெரும் மைல்கல்லை எட்டியிருக்கிறது. டாரண்ட் கேஸின் இந்த சாதனை, மற்றவர்களும் பின்பற்றப்படுவதற்கு தகுதியான ஒரு முயற்சியாகும். இயற்கை எரிவாயுவை வளர்ச்சிக்கண்டுவரும் பிராந்தியங்களில் எளிதாககிடைக்கச் செய்வது, இங்குள்ள அனைவரும் இந்த தூய்மையான மற்றும் மலிவான எரிபொருளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதோடு, சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த உதவும். இங்கு வசிக்கும் குடிமக்களுக்கும் பெருமளவில் பயன்களை அளிக்கும். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவில் சி.என்.ஜி நிலையங்களின் எண்ணிக்கையை, 3,000 நிலையங்களிலிருந்து 10,000 ஆக உயர்த்த இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மாண்புமிகு பிரதமரால் தொலைநோக்குப் பார்வையுடன் உருப்பெற்றுவரும் அடுத்த தலைமுறை எரிவாயு துறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சிஜிடி தொழில்துறை முக்கிய பங்கு வகிகித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிஜிடி தொழில்துறைக்கு, மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் எரிவாயுவை கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது ”.

சி.ஜி.டி நிறுவனங்கள் முழுமையான சேவைகளை வழங்கும் எரிசக்தி சில்லறை விற்பனையாளர்களாக மாறவும், இந்நிறுவனங்கள் தங்களது சேவைகள் மற்றும் கட்டண முறைகளை டிஜிட்டல் மயமாக்கவும் மாண்புமிகு அமைச்சர் இந்த நல்ல வாய்ப்பை பயனுள்ள வகையில் மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதம் மூலம் இனி வரும் நாட்களில், இந்திய மக்களின் வீட்டு வாசல்களில் எரிசக்தி ஆற்றலை எளிதில் வழங்க முடியும். எரிசக்தி துறையில் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எவ்வாறு வேலைவாய்ப்பை உருவாக்கலாம், இறக்குமதி சார்புநிலையை குறைக்கலாம் மற்றும் எப்படியாக ‘ஆத்மநிர்பர் பாரதத்திற்கு’ வழிவகுக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பேசிய டாரண்ட் கேஸ் நிறுவன இயக்குனர் திரு.ஜினால் மேத்தா (Mr. Jinal Mehta, Director, Torrent Gas), “நாட்டில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி பரவலாகக் கிடைக்கச் செய்யும் வகையில் பணியாற்றுவதில் டாரண்ட் கேஸ் உறுதி கொண்டுள்ளது. இதன் மூலமாக, 2030-ம் ஆண்டில் இந்திய ஆற்றல் வளத்தில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6.2%-ல் இருந்து 15%ஆக அதிகரிக்க வேண்டுமென்ற இந்திய அரசின் நோக்கத்தில் பங்கேற்கிறது. பரவலாக இயற்கை எரிவாயு கிடைப்பது இந்த மண்டலங்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நகர எரிவாயு விநியோக கட்டமைப்பை உருவாக்கும் இலக்கோடு, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8,000 கோடியை மொத்த முதலீடாக்க விரும்புகிறது டாரண்ட் கேஸ். இதில் 1,050 கோடி ரூபாய் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று உருவாக்கிய தடைகள் இருந்தபோதிலும், குறுகிய காலத்தில் 100 சிஎன்ஜி நிலையங்களை அமைத்துள்ளது டாரண்ட் கேஸ். தற்போது எங்களது அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளில் பிஎன்ஜி பரவலாகக் கிடைக்கச் செய்வதைத் தவிர, 2021 மார்ச் மாதத்துக்குள் 200 சிஎன்ஜி நிலையங்கள் அமைப்பதை அடுத்த இலக்காகவும், 2023 மார்ச் மாதத்துக்குள் 500 சிஎன்ஜி நிலையங்கள் அமைப்பதை இடைக்கால இலக்காகவும் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Intellectual Property Protection | Trade Marks

நாடு முழுவதும் சுத்தமாக, விலை மலிவாக சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி கிடைப்பதென்பது போதுமான ஆற்றல் தேவையை நோக்கிய ஒரு முக்கியமான அடியாகும். அது மட்டுமல்லாமல், பாரிஸ் ஒப்பந்தத்தில் உமிழ்வைக் குறைக்கச் செய்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் இது எதிர்கொள்கிறது. சிஎன்ஜி நிலையங்களை நிறுவுவதோடு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பெட்ரோல், டீசலுக்கான மாற்றாக சிஎன்ஜி விளங்குவது குறித்த விழிப்புணர்வைக் கட்டமைப்பதிலும் டாரண்ட் கேஸ் அதிகமாக கவனம் குவித்து வருகிறது.

டாரண்ட் குழுமம் பற்றி
மருந்துகள், மின்சாரம் மற்றும் நகர எரிவாயு விநியோக (CGD) துறைகளில் ரூ.22,000 கோடி (3 பில்லியன் அமெரிக்க டாலர்) வருவாயுடன் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது டாரண்ட் குழுமம்.

இக்குழுமத்தின் முதன்மையான நிறுவனமாக இருந்துவரும் டாரண்ட் பார்மா, உலகம் முழுவதும் 40 நாடுகளில் கார்டியோ வாஸ்குலர் மற்றும் சிஎன்எஸ் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.

மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் என்று மொத்த ஆற்றல் மதிப்பு சங்கிலி முழுவதும் தன் இருப்பைச் செலுத்திவரும் டாரன்ட் பவர், மின்சாரத் துறையில் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. டாரண்ட் பவர் 3,879 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது; இது, 3 மாநிலங்களிலுள்ள 10 நகரங்களில் 3.65 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்கிறது.

டாரண்ட் கேஸ்
இந்த குழுமத்தில் நகர எரிவாயு விநியோக வணிகத்தில் (City Gas Distribution – CGD) ஈடுபட்டு வரும் நிறுவனமாக விளங்கும் டாரண்ட் கேஸ் (Torrent Gas), நாட்டில் முன்னணியிலுள்ள சிஜிடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இது, சிஜிடி உட்கட்டமைப்பை அமைக்கவும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (Compressed Natural Gas – CNG) வாகனம் பயன்படுத்துவோர்க்கு விற்கவும் அங்கீகாரம் பெற்றுள்ளது. 7 மாநிலங்களில் (உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா) உள்ள 32 மாவட்டங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் (புதுச்சேரி) உள்ள தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு குழாய் இயற்கை எரிவாயுவை (Piped Natural Gas – PNG) அளிக்கவும் அங்கீகாரம் பெற்றுள்ளது. டாரண்ட் கேஸ் அங்கீகாரம் பெற்ற பகுதிகளில், சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 7% ஆகும்.

சிஎன்ஜி பற்றி.. (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு)
தற்போது புத்திசாலியான, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுள்ள வாகன உரிமையாளர்களின் விருப்பத் தேர்வாக சிஎன்ஜி உள்ளது. காரீயம் மற்றும் கந்தகம் இல்லாத (lead and sulphur-free) தன்மை காரணமாக, பொதுவாக இது பசுமை எரிபொருளாகக் கருதப்படுகிறது; சிஎன்ஜி உமிழ்வைக் கணிசமாகக் குறைப்பதன் மூலமாக உலக வெப்பமயமாதல் விளைவுகளும் குறைகின்றன. சிஎன்ஜி சுத்தமான எரிபொருளாகவும், அரிக்கும் தன்மையற்றதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், எந்திர சக்தியில் சமரசம் ஏதுமில்லாமல் என்ஜின் ஆயுளை மேம்படுத்துகிறது மற்றும் எரிபொருள் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கிறது. வாகனம் ஓட்டும் சூழல் மற்றும் இடங்களைப் பொறுத்து, வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலைவிட சிஎன்ஜி மிக மிக மலிவானது. இதனைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் இருந்து முறையே 50%, 30% வரை எளிதாகச் சேமிக்க முடியும்.

இன்று கார்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் இதர பொது போக்குவரத்து வாகனங்களில் சிஎன்ஜி என்ஜின்கள் பொருத்தப்பட்ட மாடல்களை பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. ஏற்கனவே பெட்ரோலில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவோர்க்கு, சந்தையில் வேறுபட்ட பிராண்ட்களில் சிஎன்ஜி உபகரணங்கள் கிடைக்கின்றன. வழக்கமாக எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களில் சிஎன்ஜி சாதனங்களைப் பொருத்தி அவற்றை சிஎன்ஜி பயன்படுத்தும் வாகனமாக மாற்ற, அரசு அங்கீகாரம் பெற்ற ரெட்ரோபிட்டர்கள் (retrofitters) உதவுகின்றனர்.

மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ள:
ஜெயேஷ் தேசாய்,
நிர்வாக இயக்குனர்
மொபைல்: +91 9824501396
மின்னஞ்சல்: JayeshDesai@TorrentLimited.com

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader