IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும் உருளைக்கிழங்கு

106

அனைவராலும் விரும்பி உண்ணப்படுகின்ற உணவு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. உருளைக் கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் எல்லா சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஆனால் குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த உருளைக் கிழங்குதான் பிடிக்கும். உருளைக்கிழங்கு மட்டுமில்லாமல் அதன் தோலிலும் கூட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன.

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிக்கும். நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. உருளைக்கிழங்கில் உள்ள பைடோகெமிக்கல் புற்றுநோயை தடுக்கிறது. மேலும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாகாமல் தடுக்கிறது.

உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருப்பதால், அதனை அளவோடு உட்கொள்வது நல்லது. மேலும் உருளைக்கிழங்கு மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்க உடலில் உற்பத்தியாகும் குளுக்கோஸ் சர்க்கரை சத்துக்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க முடியும். இதில் மிக குறைந்த அளவிலான கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது. இதை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தோலுடன் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

#potato #eating #benefits