*ஸ்ரீமதி சாம்பிராணி" நிறுவனத்திற்கு பாராட்டு*
பாரம்பரிய மருத்துவ குணமுள்ள "உடனடி சாம்பிராணி" தயாரிப்பில் 1998 முதல் ஈடுபட்டு வரும் எமது "ஸ்ரீமதி சாம்பிராணி" நிறுவனம் தொடர் ஆராய்ச்சி மூலம் அதன் நன்மை மாறாமல் நறுமண துகள்களை உள்ளிட்டு கப் வடிவில் கண்டுபிடித்து 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக சந்தையில் அறிமுக படுத்தியது. இந்த புதுமையால் இன்று, உடனடி சாம்பிராணி விற்பனை சந்தை மதிப்பை 10 மடங்கு உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி குறிப்பாக பெண்களுக்கும் சுய உதவி குழுக்களுக்கும் வாய்ப்பை வழங்கி பலரது வாழ்வாதாரத்திற்கு உதவி வருவதால் எங்கள் கண்டுபிடிப்பை காப்புரிமை பெறாமல் மற்ற நிறுவனங்களும் இதை தயாரிக்க வழி விட்டோம். இதை தமிழ்நாடு உடனடி சாம்பிராணி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் சங்க தலைவர் மற்றும் சுகந்தி சாம்பிராணி நிறுவனர் திரு. D.S. ஜீயர் பாபு அவர்கள் பாராட்டி அனைவரும் நன்றி கூறினர்.