நேற்று (28-1-23 - சனிக்கிழமை) தமிழ்நாடு முழுவதுமிருந்து 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட முதல் "DIGITALL LEADERS CONCLAVE 2023" என்ற திட்டமிடல் கூட்டம் மிக சிறப்பாக நடந்தேறியது.
அப்துல் கலாம் ஐயாவால் துவக்கப்பெற்று "நாடுமுழுமைக்கும் இதை கொண்டு சேர்க்கவேண்டும் அதுவே என் கனவு" என்று குறிப்பிட்டு அவர் ஒப்படைத்த "டிஜிட்ஆல் (DigitTALL) அமைப்பை தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிளை அமைக்கும் முயற்சியில் பொறுப்பேற்க தயாராக இருக்கும் நண்பர்கள் பல மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர், எங்கள் நிறுவனர் திரு. S. இத்தினவேலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு உறுதி கடிதம் வழங்கி வாழ்த்தினார்.
*டிஜிட்ஆல்* அமைப்பின் நோக்கத்தில் உடன்பாடும், சமுதாய பணியில் அக்கறையும் உள்ள நண்பர்கள் தங்களை இணைத்து பங்களிக்க அழைக்கிறோம் 🙏 டிஜிட்டல் தொழில்நுட்ப தொழில் முனைவோராக (அ) டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நல்ல ஆர்வமும் திறனும் இருக்கும் நிபுணத்துவம் வாய்ந்த நண்பர்கள் 👇 இதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
https://forms.gle/dcHU2wv3e6JPcAgW9
