IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோ அச்சத்தில் வாடிகனில் போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் கடுமையான தாக்கத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் தனிமையில் உறைந்தபடி காணப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் நகரிலும் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வைரஸ் பரவாமல் இருக்க இத்தாலி அரசு விதித்துள்ள கடுமையான விதிகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது. அதன்படி அங்குள்ள அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார்.

83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனை கூட்டங்களை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More