IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அருணாப்பேரி மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

Get real time updates directly on you device, subscribe now.

 

அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியில் அழகுமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 57ம் ஆண்டு திருவிழா கடந்த 12ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் அதிகாலை 5-30 மணிக்கு 108 வேத விற்பன்னர்கள் பங்குபெற்ற மஹா யாகசாலை பூஜையை தொடர்;ந்து, கொடியேற்றம் நடைபெற்றது.

ஜன.20ந்தேதி வரை தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மேளம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
10ம் திருநாளான நேற்று இரவு 10 செட் வில்லிசை, 3 செட் மேளம், 2 செட் பேண்;ட் வாத்தியம், கணில் ஆட்டம், செண்டாமேளம், இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரம் வீதி உலா வந்தது.

தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கோயில் கோயில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பூக்குழி இறங்கினர். இவ்விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி மற்றும் பொதுமக்கள் செய்து செய்திருந்தனர்.

#Pookkuli #festival #Arunaperi #Mariamman #temple

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader