IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்

78

 

தைப்பொங்கல் தமிழர்திருநாளாக தமிழர்களின் பாரம் பரியமான வாழ்க்கை முறையை எடுத்துக்கூறும் திருநாளாக உலக தமிழர்களால் விசேஷமாக தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தில் அறுவடை காலங்களில் நன்கு மழை பெய்யவும் விளைச்சல் மற்றும், நாடு செழித்தோங்க வேண்டியும் பெண்கள் நோன்பை முடிப்பார்கள்.

நல்ல விளைச்சல் கொடுக்க உதவிய பூமி, சூரியன் மற்றும் தங்களது உழைப்புக்கு உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும். தங்களது உழைப்பு மூலம் கிடைத்த மகிழ்ச்சியான வாய்ப்பை கொண்டாடும் விதமாக தை மாதத்தின் முதல்நாள் புது நெல்லைக் கொண்டு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர்.

பொங்கல் என்பதற்கு பொங்கி பெருகி வருவது என்று பொருள். சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு ஆண்டின் முதல் அறுவடை என்று அர்த்தம். தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றை நாம் அடிக்கடி கேட்க முடியும். ஆரம்பத்தில் தை மாதத்தின் முதல் நாள் தமிழ்புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. அதுபோல் விவசாயம் நமது முன்னோர்களின் பிரதான தொழில் ஐப்பசில நாத்து நட்டு கார்த்திகைல மழைபெய்து மார்ழியில் அறுவடை செய்த நெல்லினை வீட்டிற்கு கொண்டுவந்து, தங்களது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கு நாளே தை மாதம். இதனாலேயே இக்கூற்று இன்றளவும் நம்மிடையே நிலவி உள்ளது.

ஆதிகாலத்தில் நாடோடியாக வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை விவசாயத்திற்கு முன்னேறிய பின்புதான் அவர்கள் ஒரிடத்தில் தங்கி வாழத் தொடங்கி கிராமங்கள், நாகரிகம் அமைய பெறுவதற்கு அடித்தளமாக அமைந்தது. பொங்கல் பண்டிகையை பொறுத்த வரையில் இது விவசாயம் சார்ந்த கொண்டாட்டம் என்பதேயாகும்.

தற்போது பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடி வருகிறோம். அந்த கலத்தில் நம் முன்னோர்கள் பொங்கலை இந்திர விழாவாக கொண்டாடியுள்ளனர். நாட்டு மக்களுக்கு முரசரைந்து பொது அறிவிப்பாக அறிவித்து, இந்திர விழாவை 28 நாட்கள் கொண்டாடி உள்ளதற்கான சான்றுகள் உள்ளன. இன்று பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து வீட்டிற்கு வெள்ளை அடித்து கொண்டாடி வருகிறோம். இந்திரன் மழைக்குறிய கடவுள். இவரை வேண்டினால் மாதம் மும்மாரி மழி பெய்யும். அதனால் பயிர்கள் செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில் சூரியன் பற்றிய அறிவு மக்களுக்கு வந்ததும் இவரை மக்கள் தங்கள் கண்முன் தினமும் காட்சி தரும்.

 

#Pongal #special