IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கரும்பு பொங்கல்

Get real time updates directly on you device, subscribe now.

 

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1கிலோ, கரும்புச்சாறு – 3பிட்டர், இளநீர் – 500மி.லி, தோல் சீவிய சிறிய கரும்பு துண்டுகள் – 6, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு – திராட்சை – தலா 60கிராம், நெய் – 150மி.லி, ஏலக்காய் தூள் – 1தேக்கரண்டி, நறுக்கிய வாழைப்பழம் – 3, சீனி – 50கி, சுக்குதூள் – அரை தேக்கரண்டி.

செய்முறை :

பொங்கல் பானையில் சிறிது நெய் ஊற்றி அதில் களைந்த பச்சரிசியை போட்டு சிறிது கிளரிவிட்ட பின்னர் எடுத்து வைத்துள்ள கரும்புச்சாறு ஊற்றவும்.

சிறிது சூடானதும் சீனி, சுக்குத்தூள், ஏலக்காய் தூள், கரும்புத் துண்டுகள் போட்டு கிளறி அடுப்பில் வைக்க வேண்டும்.

அரிசி நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து சிறிது நேரம் பானையை மூடி வைக்கவும்.

சூடு ஆறிய பின்பு மூடியை திறந்து வழைப்பழம், இளநீர் (தேங்காய் தண்ணீர்) நெய், வருத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, போட்டு கிளறி இறக்கி பரிமாறினால் இனிப்பான, சுவையான கரும்பு பொங்கல் தயார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader