IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பாலியல் சீண்டல் காரணமாக தலைமறைவான தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

Get real time updates directly on you device, subscribe now.

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தற்போது கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் மயிலாடும்பாளை ஒன்றியம் காமன்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவர் ரவிச்சந்திரன் (55). இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2015ம் ஆண்டு பெற்றோர்கள் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்திலும், கல்வித்துறை அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மாணவிகளிடம் விசாரணை நடத்திய பிறகு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனை உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு மாறுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு மீண்டும் காமன்நல்லூர் பள்ளிக்கே நியமிக்கப்பட்டார். தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் விடுப்பு எடுத்துவிட்டு தலை மறைவானார்.
10 வயது சிறுமி நாசம் செய்த காமூகன் கைது

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு நீதிபதிகள் முன் மாணவிகள் நடந்ததை விவரித்து கூறினர். உடனே நீதிபதிகள் ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேனி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாகி இருந்த ரவிச்சந்திரனை நேற்று இன்ஸ்பெக்டர் உஷா தேவி கைது செய்தார்.
#PocsoAct #SchoolHeadmaster #Arrest #Theni #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader