Home Press Releases சீரீஸ் ‘சி’ நிதியச் சுற்றில் 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றது பாக்கெட் எஃப்எம்

சீரீஸ் ‘சி’ நிதியச் சுற்றில் 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றது பாக்கெட் எஃப்எம்

0

முன்னணி ஆடியோ ஒடிடி தளங்களுள் ஒன்றான பாக்கெட் எஃப்எம், சீரீஸ் ‘சி’ நிதியச் சுற்றில் பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து 65 மில்லியன் அமெரிக்க டாலர்களை மூலதனமாகப் பெற்றுள்ளது.   இந்நிதியத்தை குட்வாட்டர் கேபிடல், நேவெர் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளரான டேங்க்ளின் வெஞ்சர் பார்ட்னர்ஸ் ஆகியவை வழங்கி உள்ளன. புதிதாகத் திரட்டப்பட்ட மூலதனம் முன்னிலை இடத்தை வலுப்படுத்தவும், புதிய மொழிகளில் விரிவுபடுத்தவும், ஏஐ திறன்களில் முதலீடு செய்யவும், மிகப் பெரிய ஆடியோ படைப்பாளர் சமூகத்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.

நிறுவப்பட்ட மூன்றே ஆண்டுகளில் பாக்கெட் எஃப்எம் முன்னணி ஆடியோ நிறுவனமாகத் தனது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. லாங்க்-ஃபார்மேட் கண்டெண்ட், ஆடியோ சீரீஸ், கதைகள், நாவல்கள், பாட்கேஸ்ட், அறிவுசார் நிகழ்ச்சிகள் என 100,000+ மணி நேரங்களுக்கு நிகழ்ச்சிகளை 8 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், பங்களா, ஆங்கிலம், கன்னடம், மராத்தி) இத்தளம் வழங்குகிறது. 50 மில்லியன் பயனாளிகள் மற்றும் 3 பில்லியன் + மாதாந்திர கேட்கும் நிமிடங்கள் என பாக்கெட் எஃப்எம் உலகளவில் முன்னணி ஆடியோ ஓடிடி தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

நிதியம் குறித்து பாக்கெட் எஃப்எம் இணை-நிறுவனர் & சிஇஓ ரோஹன் நாயக் கூறுகையில் எங்களுக்கு கிடைத்திருக்கும் சீரீஸ் “சி” நிதியச் சுற்று பற்றி அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். குட்வாட்டர் கேபிடல், நேவெர் மற்றும் டேங்க்ளின் வெஞ்சர் பார்ட்னர்ஸ் ஆகியோர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் சந்தை முன்னிலை இருப்பு மற்றும் செயல் திறன் மீதான நம்பிக்கைக்கு இதுவே சான்றாகும். கடந்த ஆண்டு ஆடியோ நுகர்வு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்ட நிலையில் மிகப் பெரிய ஆடியோ ஓடிடி தளத்தை  உருவாக்கும் முனைவில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.

பாக்கெட் எஃப்எம் இணை-நிறுவனர் & சிஓஓ நிஷாந்த் பேசுகையில்ஆடியோ பொழுதுபோக்குடன், சுய-உதவி நூல்கள், ஆடியோ பாடங்கள் ஆகியவற்றின் நுகர்வில் நாங்கள் 12 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளோம்.  தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள உயர் தர அறிவுசார் உள்ளடக்கங்களைப் பயனீட்டாளர்கள் தேடுகின்றனர். இந்த முதலீடு மூலம் எங்கள் படைப்பாளர் சமூகத்தை வளர்க்கவும், பொழுதுபோக்கிற்கும் அறிவுசார் நிகழ்ச்சிகளுக்குமான முன்னிலை ஆடியோ நிறுவனமாக ஆகவும், அடுத்த 12 மாதங்களில் 5 மில்லியன் கட்டணம் செலுத்தும் பயனீட்டாளர்கள் என்னும் எண்ணிக்கையை எட்டவும் திட்டமிட்டிருக்கிறோம்’ என்றார்.

குட்வாட்டர் கேபிடல் முதலீடு குறித்து அதன் இயக்குனர் ஸ்காட் ஷியாவோ கூறுகையில்உலகெங்குமுள்ள ஆடியோ படைப்பாளர்கள் எழுதுவதில் தொடங்கி வாய்ஸ்-ஆக்டிங்க் வரை மிகச் சிறந்த லாங்க்-ஃபாமேட் ஆடியோ கண்டெண்ட் வடிவமைக்க பாக்கெட் எஃப்எம் ஆற்றலை அளிப்பதுடன், இந்த உள்ளடக்கத்தைத் தேடவும், கண்டுபிடிக்கவும் நுகர்வோர்க்குச் சேனலையும் வழங்குகிறது. தனது தளத்தில் தொடர்ந்து வளர பாக்கெட் எஃப்எம்-க்குத் துணை நிற்க தயாராக இருக்கிறோம்’ என்றார்.

நிதியம் குறித்து நேவெர் கார்பொரேஷன் முதலீட்டு இயக்குனர் யாங்க் ஜங்க் (ஒய்ஜே) பார்க் பேசுகையில் ‘ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடங்கி பாக்கெட் எஃப்எம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியையும், ஆடியோ ஓடிடி தளத்தில் முன்னிலை இடத்தையும் விரைந்து  பெற்றதுள்ளது.  படைப்பாளர்களே பிரதானம் என்ற கொள்கையோடு செயல்படும் பாக்கெட் எஃப்எம்,  ஆடியோ ஓடிடி வெளியில் ஒரு பெரிய வளர்ச்சி அலையை தோற்றுவிக்கவும் அடுத்த தலைமுறை பொழுதுபோக்கிற்கு உந்து சக்தியாக இருக்கவும் முனைப்போடு இருக்கிறது. நேயர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் மிக சிறப்பான ஆடியோ சூழலமைவை நிறுவும் முயற்சியில் பொழுதுபோக்கு மற்றும் கண்டெண்ட் சந்தையில் அவர்களுடன் இணைந்து செயல்படவும், அடுத்த கட்ட வளர்ச்சியில் இந்த நிறுவனத்துக்கு ஆதரவளிப்பதிலும் மகிழ்கிறோம்’ என்றார்.

நேயர்களை மகிழ்விக்கப் புதிய நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கங்களையும் அறிமுகப்படுத்துவதில் பாக்கெட் எஃப்எம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.  இன்றைக்கு இத்தளத்தில் 50.000+ பியூஜிசி எழுத்தாளர்கள் & வாய்ஸ் கலைஞர்களை உள்ளடக்கிய படைப்பாளர்கள் சமூகம் உள்ளது. இந்த நிதியச் சுற்றுக்கு முன் பாக்கெட் எஃப்எம் முந்தைய சுற்றுகளில் 28.6 மில்லியன் அமெரிக்கா டாலர்களை ஏற்கனவே உள்ள லைட்ஸ்பீட், டென்செண்ட், டைம்ஸ் குழுமம், டேங்க்ளின் வெஞ்சர் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட மார்க்கீ முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ளது.

Exit mobile version