IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பி.மனோகர்லால் ஜுவல்லர்ஸின் ப்ரைடல் சோய்ரீ 2019 கண்காட்சி பேஷன் ஷோ

25


இணை மீதான ஈர்ப்பைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வடிவ நகைகளை பி.மனோகர்லால் நிறுவனம் காட்சிப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தீபாவளியை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்து வரும் திருமண சீசனை முன்னிட்டும் இந்த வகையான ஃபயர்லைட் கலெக்‌ஷன் கோவையில் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்காக பிரமாண்ட பேஷன் ஷோ கோவையில் நடைபெற்றது. இரவிலும் கூட ஒளி மிளிரும் வகையிலான கலெக்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எங்களின் கலெக்‌ஷன் ப்ரைட் ஆஃப் ராஜஸ்தான். இது ராஜஸ்தானின் பலம்பெரும் நகரங்களில் இருந்து உருவானவை.


ஜடாவு என்ற தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை. ஜடாவு தொழில்நுட்பம் பாரம்பரியம் சிதையாமல் பாதுகாக்கும். இதன் அழகு பெண்ணுக்கு மேலும் அழகு சேர்க்கும். மயக்கும் நுட்பம் கொண்டது. மூன்றாவது வடிவமைப்பு கலரோமா. நிறம் இல்லாத நாடகம் ருசிக்காது. அதுபோலத்தான் இந்த கலெக்‌ஷனின் கண்கவர் நிறங்கள் நிச்சயம் இந்த ஷோவை தன் வசம் ஈர்த்துக் கொள்ளும். உங்களை மெய்மறந்து வாய்பிளந்து ஆச்சரியப்படவைக்கும்.


எல்லா நகைகளுமே அணிவதற்காக மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. சில அணிகலன்களை ரசிப்பதற்காகவும் உருவாக்குகிறோம். மனோகர்லால் ஹைதராபாத்தின் தலைசிறந்த ஜூவல்லரி நிறுவனம். நவாப்களின் நகரமான ஹைதராபாத்தில் அரச குடும்பத்தினர் அணிந்ததற்கு இணையான நகைகள் விற்பனை செய்துவருகிறோம். பாரம்பரியமும் நம்பிக்கையுமே எங்களின் அடையாளம். வாடிக்கையாளர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளோம். தலைமுறைகள் கடந்து செல்வாக்கை சம்பாதித்துள்ளோம். இதுவே பி.மனோகர்லாலின் அடையாளம், என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


#PManoharlal #Jewelers #fashion show