IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்தமைக்கு நன்றி – பிரதமர் மோடி தமிழில் டுவிட்

38

முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்து கொண்டார். இன்று காலை சீன அதிபர் கிண்டியிலிருந்து கார் மூலம் கோவளம் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மோடி தங்கியிலுள்ள ஓட்டலில் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உயர்மட்ட குழுவினரும் பங்கேற்றனர்.

வங்கதேசம்- சீனா – இந்தியா – மியன்மர் நாடுகளை இணைக்கும் தாழ்வார திட்டம் மற்றும் இந்தியா, சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்து சீன அதிபர் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பினார். அதன்பிறகு கலை நிகழ்ச்சிகளுடன் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வழியனுப்பி வைக்கப்பட்டனர். இந்திய சுற்றுப்பயணம் முடித்து நேராக நேபாளத்திற்கு சீன அதிபர் புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளதாவது, “அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

இந்த சந்திப்பால் இருநாடுகளுக்கிடையே இனி எந்தப் பிரச்சனையும் எழ அனுமதிக்க மாட்டோம். இந்தியா – சீனா இடையே புதிய நிலைத்தன்மை உருவாகியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.