IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி-க்கள் திடீர் சந்திப்பு! பாஜகவுடன் நட்புறவில் திமுகவா?

98


16 அம்ச கோரிக்கைகளுடன் திமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

பிரதமர் மோடியை திமுக எம்.பிக்களான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகியோர் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். பிரதமரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை உயரத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும்.

மேகதாது திட்ட அறிக்கைக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும். மாநில உரிமைகளை நிலை நாட்டும் வகையில் அரசியலமைப்பை மாற்ற வேண்டும். விவசாய பாதிப்பு திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நதிகள் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தது.
#PMModi #Kanimozhi #TRBalu #TrichySiva #In4Net