IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மாமல்லபுரம் கடற்கரையில் குப்பை அகற்றும் பணியில் பிரதமர் மோடி

0 30

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பணியில் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். கோவளம் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி, காலை நடை பயிற்சியின் போது வழியில் கிடந்த குப்பைகளை கைகளால் அகற்றினார்.

கடற்கரையில் 30 நிமிடம் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியரிடம் தந்து அப்புறப்படுத்த கூறியதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்தார். பொது இடங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க மக்களுக்கு மோடி டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள அனைவரும் உறுதியேற்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.