IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிளாஸ்டிக் உபயோகித்ததால் போலீஸ் கேண்டீனுக்கு ரூ3 ஆயிரம் அபராதம்

72

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய போலீஸ் கேண்டீனுக்கு ரூ3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்தது. தடையைமீறி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்வதுடன், மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல், மளிகை கடைகள் உள்பட அனைத்து இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுத செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

Related Posts
1 of 10

இந்நிலையில் கோவையில் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

அந்த புகாரின் பேரில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் கேண்டீனில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் கேண்டீன் நிர்வாகத்துக்கு ரூ3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதனால் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தன் காரணமாக பார்சல் சாப்பாடு, பார்சல் டீ க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

#plastic #Police #canteen #fine