உலகப்போரில் ரியல் ஹீரோவாக செயல்பட்ட சேராமி புறா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

0
66

முதல் உலகப்போருக்கு முன்னாடி பிரான்ஸ் நாட்டினர் சுமார் 100 புறாக்களை அமெரிக்காவிற்கு அன்பாக பரிசளித்துள்ளனர்.

அதனை வெறும் வளர்ப்பதற்கு மட்டுமின்றி போர்க்காலங்களில் அந்த புறாக்களை தகவல் பரிமாற பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்து அமெரிக்க நாட்டினர் அதற்கு பயிற்சிகள் அளித்துள்ளனர்.

1918ல் முதல் உலகப்போரில் அமெரிக்க படைக்கும் ஜெர்மன் படைக்கும் மிகப்பெரிய போர் சண்டை நடந்துள்ளது.

அந்த நேரத்தில் ஜெர்மனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அமெரிக்க போர் வீரர்கள் குழு குழுவாக பிரிந்து செயல்பட தொடங்கினர்.

அதில் ஒரு மிகப்பெரிய குழு ஒரு இடத்தில் பதுங்குகின்றனர். அங்கு ஒரு மெய் சிலிர்க்கும் காட்சி ஒன்று நிகழ்கிறது.

ஆயிரக்கணக்கான அமெரிக்க படைவீரர்கள் ஒரு பதுங்கு குழியில் பதுங்கிக் கொள்கின்றனர்.

அங்கு ஆள் இருப்பதை அறிந்து கொண்ட ஜெர்மனி வீரர்கள் தொடர்ந்து குண்டுக்கு குண்டு போட்டதால் அமெரிக்க வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர்.

மீதி உள்ள வீரர்கள் நாம் எப்படியாவது உயிருடன் தப்ப வேண்டும் என அந்த இடத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கின்றனர்.

நிறைய போர் வீரர்கள் இறந்த பிறகு அந்த பதுங்கு குழியில் 200 அமெரிக்க வீரர்கள் மட்டும் அந்த குழியில் இருக்கின்றனர். அதிலும் பல பேர் பட்டினியில் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளான அந்த குழுவின் மேஜர் சார்ல்ஸ் ஒயிட் ஒரு முடிவு எடுக்கிறார்.

அதில் தான் கொண்டு வந்த புறாக்களில் ஒன்றை எடுத்து அதன் காலில் ஒரு தகவலை அனுப்புகிறார். அதில் நாங்கள் வடக்கு பக்கம் பதுங்கியுள்ளோம். எங்களை காப்பாற்றுங்கள் என எழுதி அனுப்புகிறார்.

அந்த புறா பதுங்கு குழியை விட்டு வெளியே வந்ததும் அதனை பார்த்த ஜெர்மனி வீரர்கள் அந்த புறாவை சுட்டு தள்ளினர்.

அதற்கு பிறகு சார்ல்ஸ் விடாமல் அடுத்தடுத்த புறாவின் கால்களில் தகவலை எழுதி வைத்து அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார்.

ஜெர்மனி வீரர்களும் குழியை விட்டு வெளியே வரும் அனைத்து புறாக்களையும் சுட்டு தள்ளுகின்றனர். அதில் கடைசியாக மிஞ்சியது ஒரு புறா மட்டுமே. அதுதான் நமது ரியல் ஹீரோ.

கடைசியாக மிச்சம் உள்ள அந்த புறாவின் பெயர் சே ராமி. அந்த புறாவின் காலில் சார்ல்ஸ், இதுதான் கடைசி புறா. நாங்கள் எவ்வளவு நேரம் உயிருடன் இருப்போம் என்று தெரியலை. இந்த இடத்தில் இருக்கிறோம் என்று இந்த இருப்பிடத்தையும் குறிப்பிட்டு இந்த செய்தியை அதன் காலில் கட்டி அனுப்புகிறார்.

பதுங்கு குழியை விட்டு வெளியே வந்த சேராமி புறா பறக்கும் போது ஜெர்மனி வீரர்கள் பார்த்துவிடுகின்றனர்.

அதனை ஜெர்மனி வீரர்கள் சுட ஆரம்பிக்கும் போது அவர்களின் கண்களை விட்டு தப்பி மாற்றி மாற்றி வேறு திசையில் பறந்து தப்பிக்க முயல்கின்றது.

அதில் ஒரு புல்லட் அந்த புறாவின் மார்பில் உரசிச் செல்கிறது. இன்னொரு புல்லட் அதன் கண்களிலும் மற்றொரு புல்லட் அதன் காலிலும் பட்டவுடன் சேராமி புறா கீழே விழுகிறது.

கீழே சுருண்டு விழுந்த சேராமி, நாமதான் அவர்களின் கடைசி நம்பிக்கை.

இந்த செய்தியை எப்படியாவது கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அந்த குண்டு அடிபட்டதுடன் வலி வேதனையுடன் சேராமி மீண்டும் மேலே பறக்க ஆரம்பிக்கிறது.

அப்பொழுதும் சுட ஆரம்பிக்கிறார்கள். அந்த குண்டுகளிலிருந்து தப்பித்து ரத்தம் சொட்ட சொட்ட பறக்க ஆரம்பிக்கிறது.

குண்டு அடி பட்டதுடன் ஒன்று அல்ல இரண்டு அல்ல 40 கீ.மீ நமது சேராமி பறந்து செல்கிறது. அந்த தூரத்தை கடந்து 25 நிமிடம் பறந்து சென்று மற்றொரு அமெரிக்க போர் படைவீரர்களின் கூடாரத்தை அடைந்து விடுகிறது.

அங்கு அதிகாரிகளின் முன் உள்ள மேசையில் அரை மயக்கத்தில் பொத்தென கீழே விழுகிறது.

அதன் காலில் உள்ள கடிதத்தில் உள்ள தகவலை அறிந்து கொண்டு 194 போர் வீரர்களை பதுங்கு குழியில் இருந்து அமெரிக்க டீம் காப்பாற்றுகின்றது.

 

அன்றைக்கு அமெரிக்க மிலிட்டரியின் 77வது பெட்டாலியனுக்கு நமது சேராமி புறா தான் ரியல் ஹீரோவாக இருந்துள்ளது.

அதற்கு உடனயாக சர்ஜரி செய்தாலும் அதன் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டதனாலேயேயும் கண் மற்றும் கால்கள் போனதால் அதனால் பறக்க முடியவில்லை. இருப்பினும் உயிருடன் இருந்தது.

அந்த நேரத்தில் அமெரிக்காவின் மொத்த மிலிட்டரி டீமும் சேராமிக்கு சல்யூட் செய்தனர்.

சேராமி புறா மிலிட்டரியிலிருந்து தனது தாய் நாட்டிற்கு திரும்பும் போது மொத்த அமெரிக்க மக்களும் கொண்டாடினர்.

அமெரிக்க மிலிட்டரியின் ஒரு பிரிவுக்கு சேராமியின் உருவத்தை ஒரு முத்திரையாக வைத்தனர்.

 

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் மிகப்பெரிய விருதுகளும் சான்றிதழ்களும் அதற்கு கொடுத்தனர்.

1919ல் ரியல் ஹீரோ சேராமி புறா இறந்துவிடுகிறது.

அதன் உடம்பை தூக்கி போட்டுவிடாமல் அதை பதப்படுத்தி அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டனில் உள்ள ஸ்விட்ச்ஸ்டோன் என்ற அருங்காட்சியத்தில் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.

உண்மையாக ரியல் மரியாதை செலுத்தினர்.