IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உடற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை மாவட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்கள் கடந்த 70 நாட்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 1ஆம் தேதியிலிருந்து ஒரு சில ஊரடங்கு தளர்த்தப் பட்டன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் வாடகை மின் கட்டணம். சம்பளம் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் எங்களுடைய வாழ்வு வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீண்டும் உடற்பயிற்சி நிலையத்தை திறக்கக்கோரி ஏற்கனவே 2 முறை மனு கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. 3வது முறையாக உடற்பயிற்சி நிலையத்தை திறக்க அனுமதிக்க வேண்டும்.

அரசு உத்தரவிடும் விதிகளை பின்பற்றி சமூக இடைவெளியை பின்பற்றி உடற்பயிற்சி நிலையங்கள் செயல்படுத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கையை கொடுத்துள்ளதாக உடற்பயிற்சி சங்கத்தினர் தெரிவித்தார்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader