வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி

Get real time updates directly on you device, subscribe now.

பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம், போதிய பாத பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பது தான். பலரும் அழகைப் பராமரிக்கிறேன் என்ற பெயரில், தங்களது முகம், கை, கால்களுக்கு மட்டும் பராமரிப்புக்களைக் கொடுத்துவிட்டு, பாதங்களை மறந்துவிடுவார்கள். ஆனால் அழகு என்பது முகம், கை, கால்களில் மட்டும் அல்ல. தலை முதல் பாதம் வரை நாம் சுத்தமாக பராமரிப்பதில் தான் உள்ளது.

வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய தேவையான பொருட்கள்:

நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன், ஒரு வாளி, வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை, ஷாம்பு, கல் உப்பு, நெயில் கட்டர், மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார், மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்.

செய்முறை : 

* முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும்.

* பின் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

* பின்பு மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்த்து விட வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும்.

* அடுத்து நெயில் கட்டர் கொண்டு கால் விரலில் உள்ள நகங்களை வெட்ட வேண்டும். பின் நகங்களின் முனைகளை தேய்த்து விடுங்கள். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் இருக்கும்.

*இறுதியில் கால்களை ஒருமுறை நீரில் நன்றாக கழுவிட்டு, பின் துணியால் துடைத்து உலர வைக்க வேண்டும்.

* அடுத்ததாக மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயைத் தடவினால் பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், வறட்சியின்றியும் காணப்படும்.

*குறிப்பாகா இச்செயலை இரவில் படுக்கும் முன் செய்து, மாய்ஸ்சுரைசர் தடவிய பின் கால்களுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டால், பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு விரைவில் மறைந்துவிடும். மேலும் இச்செயலை வாரம் ஒருமுறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader