IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மயில்களுக்கு விஷம் வைத்தாரா விவசாயி – தீவிர விசாரணை

13

ராமநாதபுரம் அருகே விஷம் கலக்கப்பட்ட தானியத்தை உண்ட 12 மயில்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ராமநாதபுரம் அருகேயுள்ள முதுனாள் கிராம பகுதியில் மயில்கள் அதிகம் உள்ளன.
அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் இரு இடங்களில் மயில்கள் கும்பலாக உயிரிழந்து கிடப்பதாக ராமநாதபுரம் சரக வனத்துறை அலுவலா் எஸ்.சதீஷுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அவா் சம்பவ இடத்துக்கு சென்றாா். அப்போது 6 ஆண் மயில்களும், 6 பெண் மயில்களும் என 12 மயில்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

மயில்கள் உயிரிழப்பைத் தொடா்ந்து சூரங்கோட்டை கால்நடை உதவி மருத்துவா் சாரதா பிரேதப் பரிசோதனை மேற்கொண்டபோது விஷம் கலந்த தானியங்களை உண்டதால் மயில்கள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து விஷம் குறித்து மேலும் அறிவதற்கு மயில்களின் குடல் போன்ற உறுப்புகள் சேகரிக்கப்பட்டு, அவை ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

வயல் வெளிகளில் உள்ள நெல் உள்ளிட்ட தானியங்களை மயில்கள் அவ்வப்போது உண்டு வந்ததால், அதிருப்தியடைந்த அப்பகுதி விவசாயி ஒருவா் தானியங்களில் விஷம் கலந்திருக்கலாம் என்ற அடிப்படையில் முதுனாள் கிராம்ததைச் சோ்ந்த கோபி (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருவதாக வனத் துறையினா் கூறினா்.