ஆதாரம் காட்டுங்க பார்க்கலாம்? சுப்ரீம் கோர்ட்டுக்கு ப.சிதம்பரம் சவால்!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு கொடுத்த அனுமதி மூலம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சிபிஐ அவரைக் கைது செய்து காவலில் எடுத்தது. 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் கைது தொடர்பான முன் ஜாமின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு கொடுத்த அனுமதி மூலம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார் என்று சிதம்பரம் தரப்பு சிபிஐக்கு சவால் விடுத்தது.