பயணிகளின் வாகன ஏற்றுமதி கடும் வீழ்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக தேவையில் ஏற்பட்ட பின்னடைவையடுத்து நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் வாகன ஏற்றுமதி 75 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதுகுறித்து மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் உலக நாடுகளுக்காக இந்தியா 43,748 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பயணிகள் வாகன ஏற்றுமதி மிகவும் அதிக அளவாக 1,73,054-ஆக காணப்பட்டது.

பயணிகள் கார் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கடந்தாண்டின் அளவான 1,36,204-லிருந்து வீழ்ச்சியடைந்து 31,896-ஆகியுள்ளது. இதேபோன்று, வெளிநாடுகளுக்கான பயன்பாட்டு வாகன ஏற்றுமதியும் 36,418 என்ற எண்ணிக்கையிலிருந்து 67.56 சதவீதம் சரிவடைந்து 11,813-ஆனது.

மேலும், வேன் ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 432 ஆக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 90.97 சதவீதம் சரிவடைந்து வெறும் 39-ஆனது என சியாம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சியாம் அமைப்பின் தலைமை இயக்குநர் ராஜேஷ் மேனன் பிடிஐ-யிடம் கூறியுள்ளதாவது:

Intellectual Property Protection | Trade Marks

விநியோக தொடர் பாதிப்பு: கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல உலக நாடுகளில் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டது. இதனால், பல நகரங்களில் விநியோக சங்கிலித் தொடரில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தாக்கம், சர்வதேச வர்த்தகத்திலும் எதிரொலித்தது. ஆனால், தற்போது வாகன விற்பனை மற்றும் அவற்றின் ஏற்றுமதியில் முன்னேற்றம் தென்பட்டு வருகிறது. எனவே, வரும் மாதங்களில் வாகன விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லத்தீன் அமெரிக்கா : நம்நாடு குறிப்பாக, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் ஹுண்டாய் மோட்டார் அதிகபட்சமாக 12,688 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் 74.73 சதவீத சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி: இதனைத் தொடர்ந்து, மாருதி சுஸுகி இந்தியா முதல் காலாண்டில் 9,410 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 65 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கியா மோட்டார்ஸ் 5,395 வாகனங்களையும், அதேசமயம் ஃபோர்டு இந்தியா 5,209 வாகனங்களையும் ஏற்றுமதி செய்துள்ளன. இந்நிறுவனங்களின் வாகன ஏற்றுமதி 84.53 சதவீதம் குறைந்துள்ளது.

நிஸான் மோட்டார்: ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி கணக்கீட்டு காலாண்டில் 77.56 சதவீதம் குறைந்து 4,154-ஆகவும், ஜெனரல் மோட்டார் ஏற்றுமதி 84.06 சதவீதம் சரிந்து 3,186-ஆகவும், நிஸான் மோட்டார் இந்தியா வாகன ஏற்றுமதி 80.92 சதவீதம் சரிந்து 2,127-ஆகவும் இருந்தன.

டாடா மோட்டார்ஸ்: இவை தவிர, முதல் காலாண்டில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஏற்றுமதி 79.73 சதவீதம் குறைந்து 896-ஆக இருந்தது. மேலும், ஹோண்டா நிறுவனத்தின் ஏற்றுமதி 142-ஆகவும், டாடா மோட்டார்ஸ் ஏற்றுமதி 15-ஆகவும், ரெனோ ஏற்றுமதி 24 ஆகவும், இசுஸ் மோட்டார் ஏற்றுமதி 11-ஆகவும் இருந்தது என்றார்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader