IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தான் இறந்த பிறகு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள் ! கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மாவின் வேண்டுகோள்

0 139

மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மா, தான் இறந்த பிறகு தனக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள் என்று ரசிகர்களிடம் கூறியது அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேரந்தவர் முனியம்மா. இவர் சிறுவயதில் இருந்தே நாட்டுப்புற பாடல் பாடி ஆடி மகிழ்ந்தவர் பரவை முனியம்மா. அவரது திறமைக்கு தமிழ் சினிமாவில் தாமதமாகத்தான் வாய்ப்பு கிடைத்தது.

சீயான் விக்ரம் நடித்த தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக அறிமுகமானார். அந்தப்படத்தில் சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி என்ற பாடல் பட்டி தொட்டி முழுவதும் பிரபலமாகி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்து கிடைக்கச் செய்தது.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் வயோதிகம் காரணமாக மீண்டும் உடல்நலக்குறைவால் படுக்கையில் படுத்தார். இதனால் படவாய்ப்புகள் குறைந்ததால் வறுமையில் வாடினார். இதனையறிந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வைப்புத் தொகையாக ரூ.6 லட்சம் பணத்தை பரவை முனியம்மாவிற்கு வழங்கினார். இந்தப்பணம் மாதம் தோறும் ரூ.6 ஆயிரமாக அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவால் பரவை முனியம்மா பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கண்ணீருடன் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது தான் இறந்த பிறகு தனக்கு மாதம் தோறும் கிடைக்கும் ரூ.6ஆயிரம் பணத்தை எனது மாற்றுத் திறனாளியான எனது மகனுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரவை முனியம்மாவின் இந்த வேண்டுகோள் அந்தப்பகுதி மக்களை கண்கலங்க செய்துள்ளது. திறமையான பாட்டியை இந்த நிலைமையில் பார்க்கும் போது கண்ணீர் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தார். மேலும் இவரது கோரிக்கையை அரசு ஏற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.