IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிலம்பம், ஜுடோ போட்டிக்கு பரமக்குடி மாணவர்கள் தேர்வு

33

இராமநாதபுரம், டிசம்பர்.12 – மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் ஜுடோ போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 800 மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்.

சிலம்பம் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவி விஜயலட்சுமி தங்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

மேலும் ஜுடொ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவருக்கான பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவருக்கான பிரிவில் தீப்தி தர்சன் தங்க பதக்கம் வென்று மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

இவர்கள் இருவரும் அடுத்த மாதம் கரூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.