IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பனிக்கநாடார் குடியிருப்பு முத்து சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழா சிறப்பு பூஜை

Get real time updates directly on you device, subscribe now.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அடுத்த கீழநாலுமாவடி, பனிக்கநாடார்குடிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத முத்து சாஸ்தா அய்யனார் திருக்கோவிலில் பங்குனி உத்திரவிழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ முத்து சாஸ்தா அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக வந்து அய்யனின் அருளாசி பெற்றுச் செல்வார்கள்.

இந்த ஆண்டும் பங்குனி உத்திர விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கொரோனா அபாயம் காரணமாக நாடு முடுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதேநேரம், கோயிலில் இன்று வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. முத்து விநாயகர், ஸ்ரீ முத்து சாஸ்தா, பேச்சியம்மன், குதிரை வீரன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்து சாஸ்தாவின் படங்கள் பக்தர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்த குலதெய்வத்திடம் அருளாசி பெற்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader