IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நாங்க நினைச்சா இந்தியாவை 22 துண்டாக உடைச்சிடுவோம்! பாக்., அமைச்சரின் திமிர் பேச்சு!!

9


நாங்க நினைச்சா இந்தியாவை 22 துண்டாக உடைச்சிடுவோம் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் திமிருடன் பேசியிருக்கிறார்.


மத்திய பாஜக அரசு கடந்த மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது சரியா, தவறா என்ற பட்டிமன்றம் பல்வேறு தரப்பிலும் நடத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


பாகிஸ்தானில் இந்த சட்டப்பிரிவு ரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியா மீது போர் தொடுப்போம் என்றெல்லாம் ஆரம்பத்தில் மிரட்டல்களும் வந்தன. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் எப்படிப்பட்ட போரையும் சந்திக்கத் தயார் என்று இந்திய பதிலடி கொடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அமைதியானது.


இதற்கிடையில் அமெரிக்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அங்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு ட்ரம்ப் அளித்த பேட்டியில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் என்னால் உதவ முடியும். இரு நாடுகளும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் நபராக இருக்க விரும்புகிறேன், என்றார். மத்தியஸ்தம் தேவையில்லை என்று இந்தியா கருத்து தெரிவித்தது.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல்
பின்னர், சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை. காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீட்டை விரும்பவில்லை என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் நேரடியாகவே அவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து இந்திய பிரதமரின் துணிச்சலைப் பலரும் பாராட்டினார்கள்.


இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் ரொம்பவே திமிருடன் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் ரயில்வே அமைச்சராக இருக்கும் ஷேக் ரஷீத் அகமது அளித்திருக்கும் பேட்டியில், இந்தியாவில் எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தையும் தாக்கி அழிக்க வல்ல சிறிய அணுகுண்டுகள் எங்கள் வசம் உள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும் நாங்கள் நினைத்தால் அணு குண்டுகள் மூலம் இந்தியாவை 22 ஆக உடைப்போம், என்று கூறியுள்ளார்.

#PakistanMinister #SheikhRasheedAhmad #Warn #India #In4Net