IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா தொற்று காரணமாக பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார்

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த மாதம் 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.

இதையடுத்து எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் அவரது உடல்நிலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை குறித்து அறிய நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தார்.

நேற்று மாலை முதல் எஸ்.பி.பி. குணமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இன்று காலை எஸ்.பி.பி. அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை சார்பாக எஸ்.பி.பி யை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர் பூபதி ராஜன் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு, அவரது மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தஙகை எஸ்பி சைலஜா மற்றும் அவரது உறவினர்கள் வருகை தந்தனர். இதன்பிறகு காவல்துறையின் கட்டுப்பாட்டில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வந்தது.

சற்றுமுன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்ததாக தகவல் தெரிவித்தார். இவரது மறைவு இசைபிரியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader