IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவால் 4 கோடி தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் – உலக வங்கி அறிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தியதில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த ஊரடங்கு நடவடிக்கையால், நான்கு கோடி வெளி மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வங்கி, ‘கொரோனாவால் மறுகுடியோரின் பிரச்னை’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு, சுகாதார பராமரிப்பு, பண உதவி மற்றும் சமூகப் பயன்கள் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும்.

கொரோனா தாக்கத்தின் துவக்கத்தில், வெளிநாடுகளில் பணியாற்றியோர், குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஏராளமானோர், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு திரும்பினர். சீனா, ஈரான் போன்ற சில நாடுகள், அன்னிய தொழிலாளர்களை வெளியேற்றின.

இந்தியாவில் ஊரடங்கு பிறப்பித்த பின், வெளி மாநில தொழிலாளர்கள், தங்கள் ஊருக்கு திரும்பத் துவங்கினர். இந்த வகையில், நகர்புறங்களில் இருந்து, 40,000 – 50,000 பேர், கிராமப்புறங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மொத்தத்தில், ஊரடங்கால், வேலையின்மை, ஊதியம் இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், நான்கு கோடிக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், ஊரடங்கால், கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், புலம் பெயர் தொழிலாளர்களும், வெளிநாடுகளில் வேலை பார்ப்போரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர், போக்குவரத்து வசதியின்றி, ஆங்காங்கே தங்கிஉள்ளனர்.

ஒரு சில நாடுகள், வெளிநாட்டு பணியாளர்களின் ‘விசா’ காலத்தை நீட்டித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க, பல நாடுகள் கொள்கை திட்டங்களை அறிவித்து உள்ளன. ஆனால் அவற்றில், அன்னிய தொழிலாளர்கள் மற்றும் தாயகத்தில் உள்ள அவர்களின் குடும்ப நலன் சார்ந்த அம்சங்கள் இடம் பெறவில்லை. அவற்றை சேர்க்க வேண்டியது அனைத்து நாடுகளின் கடமை.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அன்னிய தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த இழப்பை சரி செய்ய திட்டம் தேவை. ஒவ்வொரு நாடும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு, ஆரோக்கியம், குடியிருப்பு, கல்வி, இழந்த வேலையை மீண்டும் பெற்று தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றை, ஒவ்வொரு நாடும், அவற்றின் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கிபணம் அனுப்புவது குறையும் கொரோனா தாக்கத்தால், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் தொகை, இந்தாண்டு, 23 சதவீதம் குறைந்து, 4.80 லட்சம் கோடி ரூபாயாக குறையும். இது, 2019ல், 6.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader