IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆர்கானிக் நன்மைகளும் தீமைகளும்

Get real time updates directly on you device, subscribe now.


நமது வழக்கமான உண்வைவிட ஆர்கானிக் உணவு சாப்பிடுவது சிறந்தது என்ற கருத்து தற்போது மேலோங்கியுள்ளதுடன் ஆர்கானிக் உணவுப் பொருட்களை பலர் நாட ஆரம்பித்து விட்டனர். உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் மூலிகைகளால் ஆன ஆர்கானிக் அழகு சாதனப் பொருட்களுக்கும் தற்போது மவுசு அதிகமாகி கொண்டே செல்கிறது.


முதலில் ஆர்கானிக் உணவு என்றால் என்ன என்று பார்ப்போம். ஆர்கானிக் எனும் வார்த்தை இயற்கையானது என்பதைக் குறிக்கிறது. ஆதாவது இரசாயனக் கலப்பில்லாமல் இற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மூலிகைகளையும், ஹார்மோன்களோ மருந்துகளோ கொடுக்காமல் வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, பால் முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் இது குறிக்கிறது.


நன்மைகள் :


ஆர்கானிக் உணவுகள்ப் பொருட்களில் செல் சிதைவுகளைத் தடுக்கக்கூடிய ஆன்டி ஆன்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருக்கின்றன. இதனால் உடலில் சத்துகள் சேர்வதுடன் ஹார்மோன் பிரட்ச்சினைகள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள், நரம்பு மண்டல பதிப்புகள் குறைகின்றன. ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.


ஆர்கானிக் உண்வுப் பொருட்களில் கனியுப்புக்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் இதன் சுவை சாதாரண உணவுகளை விட பல மடங்கு அதிகம்.


தீமைகள் :


ஆர்கானிக் உணவுகளால் தீமைகள் என்று பெரிதாக எதுவும் சொல்ல முடியும். ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்குவதென்றால் அதிகளவு பணம் செலுத்த வேண்டும். இதற்குக் காரணம் இயற்கை விவசாயத்தில் குறைந்த அளவிலான உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகும்.


நாம் வழக்கமாக பயன்படுத்தும் உணவுப்பொருட்களை எங்கும் எப்போதும் வாங்கிவிடலாம். ஆனால் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் எல்லா இடங்களிலும் எல்லாக் கடைகளிலும் கிடைப்பதில்லை. சிலவகை பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதுண்டு.


#Organic #benefits #disadvantages

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader