IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசாணை அனுமதி

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் , வணிக நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியான வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது.


மூன்றாண்டுகளுக்கு இந்த அரசாணை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும் பட்சத்தில், தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் பணி நேரம், வார விடுமுறை உள்ளிட்டவை குறித்தும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பெண்களுக்கு இரவு நேர பணி வழங்கினால், அவர்களுக்கான ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளும் அவசியம் செய்து தரவேண்டும் என்று அரசாணை கூறுகிறது.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More