IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்யும் ஓப்போ

Get real time updates directly on you device, subscribe now.

நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் சார்ஜிங் பவர் ஆனது விரைவாக குறைவடைந்து விடுகின்றது. எனினும் மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.

இதனைக் கருத்திற்கொண்டு Fast Charge தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றது. தற்போது 100 Watt Fast Charge வரையான தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

இந்த வகையில் Oppo நிறுவனம் 125 Watt Fast Charge தொழில்நுட்பத்தினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை அந்நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 4000mAh மின்கலத்தினை வெறும் 13 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை Xiaomi நிறுவனம் 100Watt Fast Charge தொழில்நுட்பத்தினை ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளதுடன் இதன் மூலம் 4000mAh மின்கலத்தினை 17 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader