IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல – பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வகையில், மத்திய மாநில அரசுகள் அனைத்துவிதமான தளர்வுகளையும் அறிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதை தடுக்க, அரசு தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், 8ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில் பள்ளி மாணவர்களிடையே பெரும் சவாலாக அமைந்துள்ள ஆன்லைன் வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆன்லைன் வகுப்பிற்கு வற்புறுத்தக்கூடாது . ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader