IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆன்லைன் சினிமா டிக்கெட் குறித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Get real time updates directly on you device, subscribe now.

திரையரங்குகளில் படம் பார்க்க ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் சினிமாத்துறை உலகம் ஒரு பெரிய இலாபத்தை தரக்கூடியதாக இருந்து வருகிறது. இது பெரிய பிஸினஸ்மேன் முதல் சாமானிய மக்கள் வரை அவர்களின் மனஅழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக விளங்கி வருகிறது. எனவே சினிமாவிற்கு அன்றுமுதல் இன்று வரை வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அதேநேரம் சினிமாவிற்கு செல்லும்போது படம்பார்க்க அங்கு வசூலிக்கப்படும் கட்டண வசூல் குடும்ப வாழ்க்கை வாழும் நடுத்தர சாமானியர்களை தியேட்டர் பக்கம் செல்லாத வண்ணம் திணற வைக்கின்றது. இந்த நிலையில்தான் சினிமா பிரியர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்கிற்கு நுழைவதற்கு அளிக்கப்படும் கட்டணத்திற்கு மட்டுமே கேளிக்கை வரி விதிக்க முடியும்.

செல்போனில் முன்பதிவு செய்வதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி கிடையாது என்று ஐகோர்ட் உத்தரவிவிட்டுள்ளது சினிமா பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

#onlinebooking #cinematicket #tax #superemecourt #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader