IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஒரே நாளில் 16 காளைகளை அடக்கிய 24 வயது இளைஞர்

Get real time updates directly on you device, subscribe now.

பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 24 வயது இளைஞர் பிரபாகரன், 16 காளைகளை அடக்கி சாதனை படைத்துள்ளார். ஜல்லிக்கட்டே எனது மூச்சு என அவர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் பங்கேற்றனர். இதில் பொதும்பையை சேர்ந்த பிரபாகரன்(24), என்ற இளைஞர் 16 காளைகளை அடக்கி சாதனை படைத்துள்ளார். அவருக்கு மாருதி சுசுகி இக்னிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரபாகரன் கடந்த 5 ஆண்டாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார். இதில் பல பரிசுகளை வென்றுள்ளார். தற்போது 16 காளைகளை ஒரே நாளில் அடக்கி சாதனை படைத்தது குறித்து அவர் கூறுகையில்,

எனது மாடு பிடிக்கும் திறமையை பார்த்து நண்பர்கள் தான் என்னை ஊக்குவித்தனர். அவர்கள் என்னுடன் களம் இறங்கி வாடிவாசலில் காளைகளை பிடிக்க உதவுவார்கள். என் சுவாசமே ஜல்லிக்கட்டு தான். 14 வயதில் இருந்தே ஊர் ஊராக சென்று ஜல்லிக்கட்டு பார்த்த நான், 2014ம் ஆண்டில் இருந்து மாடுபிடிக்க ஆரம்பித்தேன். ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பிரத்தியேக பயிற்சிகள் என்று தனியாக எடுக்க மாட்டேன். போட்டி நேரத்தில் மட்டும் சில நாள் காளைகளை நண்பர்களுடன் சேர்ந்து அடக்குவேன் என்றார்.

#oneday #jallikattu #youngman #16cow

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader