வாரத்துக்கு ரெண்டு தடவத் தலைக்கு நல்லெண்ணெய் தேய்ச்சுக் குளிங்க. பெரும்பாலான நோய்கள் அண்டாது. என்று சொன்னால் பெரும்பாலானவர்கள் தீபாவளிக்குத் தேய்ச்சு குளிக்கிறோமே அதைத்தானே சொல்றீங்க என்று கேட்பார்கள். எண்ணெய் குளியல் என்றாலே அது தீபத் திருநாளன்று மட்டும் என்று மக்களின் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது.
சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம். செம்பருத்தி, நெல்லிக்காய், சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும், மனதை அமைதிப்படுத்து.
வாரம் இரு முறை தலை முதல் கால் வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால் சரும ஆரோக்கியம் மேம்படும். உடலில் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், இரத்த ஓட்டம் சீரடையும், உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பல வாத நோய்கள் குண்மடையும். நவீன மனிதர்கள் அதிகம் அவதிப்படும் மன அழுத்தம் குறையும்.
எண்ணெய்க் குளியல் நாளன்று அசைவ உணவு வகைகள், காரம், அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து முழுகிய நாளன்று, உடல் சற்றுப் பலமிழந்து காணப்படுவது இயற்கையே. எனவே கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வேடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
#oil #bath #Benefites